கொரோனாவுக்கு எதிராக செயல்படும், தடுப்பூசிகளில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகியவை பெரும்பான்மையாக பயன்படுத்தப்படுகின்றன.இதுவரை மத்திய அரசின் அனுமதியை பெற்று மட்டுமே மாநிலங்களுக்கு அந்தந்த அரசுகள் இந்த இரு தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தி வருகின்றன.
இந்நிலையில் இந்த தடுப்பூசிகளை சந்தைகளில் விற்பனை செய்வதற்காக தயாரிப்பு நிறுவனங்கள் மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் கோரிக்கை விடுத்தனஇதனை பரிசீலித்த இந்திய மருந்துப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு, சில நிபந்தனைகளுடன் இந்நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த தடுப்பூசிகள் அளிக்கப்படவேண்டும்.மருந்து செலுத்தியபிறகு ஏதேனும் பாதிப்புகள் உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தையில் விற்கப்படும் இந்த தடுப்பூசிகள் 275 ரூபாய்க்கும் குறைவாக விலை நிர்ணயம் செய்யவும்.கூடுதல் சேவைக்கட்டணமாக 150 ரூபாய் நிர்ணயிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக, மருத்துவமனைகள் மற்றும் க்ளினிக்குகளில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Tamilmalar Natarajan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.