கோவேக்சின் தடுப்பூசி உருமாறிய கொரோனாவுக்கு எதிராகவும் செயல்படும்- பயோடெக் நிறுவனம்

கோவேக்சின் தடுப்பூசி உருமாறிய கொரோனாவுக்கு எதிராகவும் செயல்படும்- பயோடெக் நிறுவனம்

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் பல உருமாற்றங்களை அடைந்திருக்கும் என கருதப்படும் நிலையில், உருமாற்றம் பெற்ற கோரோனா வைரசுக்கு எதிராகவும் கோவாக்சின் தடுப்பூசி செயல்படும்.

 • Share this:
  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் புனே தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து கொரோனாவுக்கு எதிராக கோவேக்சின் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது. இதன் 3 ஆம் கட்ட பரிசோதனைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு கொண்டு வர அனுமதி கோரியுள்ளது.

  இந்தியாவிலும் உருமாறிய கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய ரசாயன தொழில்நுட்ப நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ண எல்லா காணொலி மூலம் பங்கேற்று உரையாற்றினார்.

  அப்போது, ‘கொரோனா வைரஸ் பல உருமாற்றங்களை அடைந்திருக்கும் என கருதப்படுகிறது. உருமாற்றம் பெற்ற கோரோனா வைரசுக்கு எதிராகவும் கோவாக்சின் தடுப்பூசி செயல்படும் என நம்பலாம்’ என்று கூறினார்.

  உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்று இங்கிலாந்து தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒருவருக்கு இந்த புதியவகை கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கோவேக்சின் தடுப்பு மருந்து இந்த புதியவகை கொரோனாவையும் எதிர்க்கும் தன்மை கொண்டது என்ற தகவல் மக்களை நிம்மதி அடையச் செய்துள்ளது.
  Published by:Suresh V
  First published: