கொரோனா தொற்றுடன் சூர்யா தேவி தலைமறைவு - போலீசில் சென்னை மாநகராட்சி புகார்

கொரோனா உறுதியானதை அடுத்து சூரியா தேவி, தலைமறைவான நிலையில் அவர் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுடன் சூர்யா தேவி தலைமறைவு - போலீசில் சென்னை மாநகராட்சி புகார்
சூர்யா தேவி
  • Share this:
வனிதாவின் திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டவர் சூர்யா தேவி. இவர் மீது வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வனிதா புகாரளித்ததை அடுத்து சூர்யா தேவி கைது செய்யப்பட்டார்.

விதிகளின் அடிப்படையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவரை சோதனைக்காக அழைத்துச்சென்ற பெண் காவல் ஆய்வாளரான ஜோதியும் பரிசோதனை செய்துகொண்டார். பரிசோதனை முடிவில் இவர்கள் இருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இந்த தகவல் வெளியானதும் சூர்யா தேவி தலைமறைவாகிவிட்டதாக் கூறப்படுகிறது.

படிக்க: கொரோனா உறுதியான 3,338 பேரைக் கண்டறிய முடியாமல் திணறும் பெங்களூரூ மாநகராட்சி


படிக்க: சென்னையில் கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி - தற்கொலை என நாடகமாடியது அம்பலம்

படிக்க: நானும், 82 வயது எனது தந்தையும் கொரோனாவிலிருந்து மீண்டது இந்த மாத்திரையால்தான் - அனுபவம் பகிரும் விஷால் வீடியோ

இந்த நிலையில், அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் தேடி வந்த நிலையில், தற்போது வரை சிக்கவில்லை. இதனை அடுத்து, சென்னை மாநகராட்சி சுகாதர ஆய்வாளர், சூர்யா தேவி மீது விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading