15 நாட்களில் சென்னையில் 10% மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருக்கும் - சென்னை மாநகராட்சி ஆணையர்

இன்னும் 15 நாட்களில் சென்னையில் உள்ள 10 சதவிகிதம் மக்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு இருக்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

15 நாட்களில் சென்னையில் 10% மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருக்கும் - சென்னை மாநகராட்சி ஆணையர்
மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
  • Share this:
சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் தனியார் பரிசோதனை மைய பிரதிநிதிகளுடன் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆலோசனை மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், சென்னையில் 4,5 நாட்களுக்கு முன்னரே 5 லட்சம் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டுள்ளோம். கடந்த மாதம் பரிசோதனைகளை அதிகரிக்க முதலமைச்சர் ஆணையிட்டதை தொடர்ந்து,  இரண்டில் இருந்து மூன்று மடங்கு வரையில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஜூன் 19-ம் தேதி நாள் ஒன்றுக்கு 4,500 பரிசோதனைகள் வரை செய்யப்பட்ட நிலையில் தற்போது கிட்டத்தட்ட 14,000 பரிசோதனைகள்  மேற்கொள்ளப்படுகிறது.

முதல் 1,00,000 பரிசோதனைகள் 2 மாத காலத்திலும், இரண்டாவது 1,00,000 பரிசோதனைகள்  25 நாட்கள் காலத்திலும், மூன்றாவது 1,00,000 பரிசோதனைகள் 16 நாட்களிலும், நான்காவது 1,00,000 பரிசோதனைகள் 10 நாட்களிலும், ஐந்தாவது 1,00,000 பரிசோதனைகள்  9 நாட்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சென்னையில் தற்போது வரை சுமார் 5,70,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள  நிலையில் இன்னும் 15 நாட்களில் சென்னையில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 10% மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து முடிக்கப்படும்.

பரிசோதனைகளை அதிகரித்து பரவலை கட்டுப்படுத்துவதே சிறந்த முறையாக இருக்கிறது. அதேபோல் குறைந்தபட்சம் அடுத்த 3 மாதங்களுக்காவது சென்னையில் மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றினால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும்.

Also read... தடை செய்யப்பட்ட சீன செயலிகளை பயன்படுத்தினால்...! தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சகம் விடுத்த எச்சரிக்கைவணிக நிறுவனங்களில் கூட்டம் கூடும்போது அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களும் கடைகளுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.  பொதுமக்களுக்கு சாதாரண (Double layer) காட்டன் முகக்கவசமே போதுமானது . N95 முகக்கவசம் அவசியம் இல்லை.

ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்று கேளம்பாக்கம் சென்றாரா இல்லையா என கேள்வி எழுப்பியதற்கு, ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திற்கு முறையான அனுமதி பெற்று சென்றாரா என்பது குறித்தும் சென்னைக்கு மீண்டும் முறையான பாஸ் பெற்ற வந்தாரா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
First published: July 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading