கொரோனா தொற்று உள்ளதா என 15 நிமிடங்களில் கண்டறியும் ஆன்டிபாடி சோதனை - பொதுமக்களுக்கு எப்போது?

மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியும் பரிசோதனை (Antibody Test) படிப்படியாக பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

  • Share this:
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 10,000 கொரோனா பரிசோதனை எடுக்கப்படுகின்றது.

தற்போது மேலும் நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிய இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகத்தின் வழிக்காட்டுதலின்படி ஒருவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவில் உள்ளது என கண்டறியும் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியும் சோதனையானது குறைந்த நேரத்தில் அதாவது 15 நிமிடத்தில் ஒருவருக்கு நோய் தொற்று உள்ளதா என கண்டறிய இயலும்.

படிக்க: ஆன்டிபாடி சோதனை முறை - எப்படி செயல்படுகிறது?

முதற்கட்டமாக கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள முதல்நிலை பணியாளர்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியும் பரிசோதனை சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது என்றும், பின்னர் படிப்படியாக பொதுமக்களுக்கும் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Also read... வீட்டில் புத்தகங்கள் வைக்கக் கூட இடமில்லை - பள்ளியிலேயே முதலிடம் பிடித்த இரட்டையர்கள்

மேலும், நேற்று மாநகராட்சி தலைமையகத்தில் பணிபுரியும் 564 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 452 நபர்களுக்கு எந்த தொற்று இல்லை எனவும், 84 நபர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி நோய் தொற்று வர வாய்ப்பில்லை எனவும், 28 நபர்களுக்கு தொற்று இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன.

இந்த 28 நபர்களுக்கும் கொரோனா தொற்று கண்டறியும் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published: