கொரோனா தடுப்பூசியை ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக நாடுகள் - கோடிக்கணக்கில் குவியும் ஆர்டர்கள்

corova vaccine | கொரோனாவுக்கு இதுவரை எந்த தடுப்பூசியும் அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால் சோதனை முயற்சியிலேயே தடுப்பூசிக்கான ஆர்டர்கள் குவியத் தொடங்கியிருக்கின்றன.

கொரோனா தடுப்பூசியை ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக நாடுகள் - கோடிக்கணக்கில் குவியும் ஆர்டர்கள்
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: June 15, 2020, 8:35 AM IST
  • Share this:
உலகம் முழுவதும் சுமார் 190 நாடுகளில் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் சுமார் 10 சிறிய நாடுகளிலேயே முழுமையாக ஒழிக்கப்பட்டிருக்கிறது. மற்ற நாடுகளில் எல்லாம் கட்டுப்படுத்தப்பட்டாலும் புதிதாக தொற்று ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதனால் உலக நாடுகள் அனைத்துமே கொரோனாவுக்கான தடுப்பூசியை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

அதனை ஈடுசெய்வதற்காக 141 தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வுகள் முழுவீச்சில் நடக்கின்றன. அதில் மனிதர்களிடம் தடுப்பூசியை பயன்படுத்தி பார்க்கும் நிலைக்கு முன்னேறியிருக்கும் ஆய்வுகள் 16 தான்.

இந்த சூழலில் தடுப்பூசிக்காக உலகின் பல நாடுகள் தற்போதே முன்பதிவு செய்யத் தொடங்கிவிட்டன. பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, நெதர்லாந்து நாடுகள் இணைந்து தங்களுக்கான தடுப்பூசியை பெறுவதற்காக ஐவிஏ எனப்படும் Inclusive Vaccines Alliance என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பு 40 கோடி தடுப்பூசி வேண்டும் என இங்கிலாந்தின் மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனகாவிடம் ஒப்பந்தம் செய்துள்ளது.


இந்த ஆண்டின் இறுதியில் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் என அதில் உறுதி கூறப்பட்டுள்ளது. உண்மையில், இந்த தடுப்பூசி இன்னும் தயாராகவே இல்லை. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தடுப்பூசிக்கான ஆய்வில் இறுதிக் கட்டத்தில்தான் இருக்கின்றன. ஆனாலும், 200 கோடி தடுப்பூசியை தயாரிக்க இலக்கு வைத்திருக்கின்றன. அவ்வளவு ஆர்டர்களை பெறவும் முயற்சித்து வருகின்றன. அமெரிக்கா மட்டும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்நிறுவனத்திடம் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் 100 கோடி தடுப்பூசிகளை தயாரித்துக் கொடுக்குமாறு Serum Institute of India என்ற நிறுவனத்துடன் அஸ்ட்ராஜெனகா ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. அதன்படி இந்தியர்கள் அனைவருக்குமே தடுப்பூசி கிடைக்கும் என Serum Institute of India நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 30க்கும் மேற்பட்ட தடுப்பூசி தயாரிக்கும் ஆய்வுகள் நடைபெற்று வந்தாலும், அவை அனைத்துமே பரிசோதனை முயற்சிக்கு முந்தைய நிலையிலேயே உள்ளன.Also See:

சுஷாந்த் சிங் மரணித்த தருணத்தில் அதே வீட்டிலிருந்த நண்பர்கள் - போலீசார் விசாரணை


’கொரோனா பாதிப்பு இந்த மாதத்தில் தான் உச்சம் தொடும்...’ ICMR ஆய்வறிக்கையில் தகவல்

சென்னையில் கொரோனா பாதித்த சுமார் 300 பேர் எங்கே...? தவறு நடந்தது எப்படி...?First published: June 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading