• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனாவை பெருங்கொள்ளை நோயாக அறிவிக்க முடியாது...! காரணம் சொல்லும் உலக சுகாதார அமைப்பு

கொரோனாவை பெருங்கொள்ளை நோயாக அறிவிக்க முடியாது...! காரணம் சொல்லும் உலக சுகாதார அமைப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Coronavirus | "இங்கிலாந்தில் மொத்தம் 206 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது"

  • News18
  • Last Updated :
  • Share this:
    கொரோனா வைரஸ் தொற்றால், உலகம் எங்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து இரண்டாயிரமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றை, சர்வதேச அளவில் பெருங்கொள்ளை நோய் என்று அறிவிக்க முடியாது என உலக சுகாதார அமைப்பு மறுத்துவிட்டது.

    கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக சீனாவில், மூன்றாயிரத்து 70 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அந்த நாட்டில் 80 ஆயிரத்து 651 ஆக உயர்ந்துள்ளது.

    சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 247 பேருக்கு வைரஸ் உறுதியாகியுள்ளது. இதனால் மொத்தம் 5883 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 233 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, வாடிகனில் நடைபெறும் போப் ஆண்டவரின் ஞாயிறு சிறப்பு தொழுகை, நேரில் நடைபெறுவதற்கு பதிலாக, இணையத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரான் நாட்டில் புதிதாக 21 பேர் பலியானதால், மொத்தம் 145 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில், 16 பேர் பலியானதோடு, 716 கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அமெரிக்காவில் 400 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக அம்மாகாண ஆளுநர் ஆண்ட்ரூ குவோமோ அறிவித்தார்.



    இங்கிலாந்தில் மொத்தம் 206 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ஜப்பானில் 13 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

    இதேபோல், ஈராக், கிரீஸ்,ஸ்பெயின், போர்சுகல்,ஐஸ்லேண்ட், தென் கொரியா என ஒட்டுமொத்தமாக 97 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

    இதனிடையே, கொரோனா பாதிப்பை, மிகப்பெரும் வைரஸ் தொற்று நோயாக அறிவிக்க முடியாது என ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம், வைரஸ் தொற்றை குணப்படுத்த முடியாமல் போனால் தான், சர்வதேச அளவிலான பெருங்கொள்ளை நோய் எச்சரிக்கை விடுக்கப்படும் என்றார். எனவே உலக நாடுகள் இடையே தேவையில்லாத அச்சத்தை, ஐ.நா. ஏற்படுத்தாது எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.




    Also Read: கொரோனா பரவலை தடுக்க அனைவரும் முக கவசம் அணிய வேண்டுமா? மருத்துவர்கள் விளக்கம்




    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: