Coronavirus | இந்தியாவில் ஒரே நாளில் அதிக கொரோனா தொற்று; உலகிலேயே அதிகம்- 3 லட்சத்தைக் கடந்தது

Coronavirus | இந்தியாவில் ஒரே நாளில் அதிக கொரோனா தொற்று; உலகிலேயே அதிகம்- 3 லட்சத்தைக் கடந்தது

மாதிரி படம்

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்தது. ஒரே நாளில் 2,104 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

  • Share this:
    இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்தது. ஒரே நாளில் 2,104 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

    நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,14,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,59,30,965 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,78,841 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் மொத்தமாகக் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,34,54,880 என்றளவில் உள்ளது. தற்போது நாடு முழுவதும் 22,91,428 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    இதுவரை கொரோனாவுக்கு நாடு முழுவதும் 1,84,657 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,104 பேர் பலியாகினர்.

    இதுவரை மொத்தம் 13,23,30,644 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

    இவ்வாறு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    நேற்று ஒரு நாளில் 16,51,711 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும். இதுவரை மொத்தமாக 27,27,05,103 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐசிஎம்ஆர் (இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்) தெரிவித்துள்ளது.

    ஒரே நாளில் உலகிலேயே அதிக கொரோனா தொற்று இந்தியாவில் பதிவாகியுள்ளது. இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,59,30,965 ஆக அதிகரித்துள்ளது. மரண எண்ணிக்கை 1,84,662 ஆக அதிகரித்துள்ளது.

    மரண விகிதத்தில் திரிபுரா, லடாக் மரணங்கள் சேர்க்கப்படவில்லை.

    மகாராஷ்டிராவில் அதிகமாக ஒரே நாளில் 67,468 பேருக்குக் கொரோனா உறுதியாகியுள்ளது. உ.பி. இரண்டாம் இடத்தில் ஒரேநாளில் 33,214 பேருக்கு கொரொனா தொற்றுடன் உள்ளது. டெல்லியில் 24,368 பேருக்கு ஒரேநாளில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 21ம் தேதி அதிக மரண விகிதத்தில் மகாராஷ்டிரா 568 மரணங்களுடன் முதலிடம் வகிக்கிறது.

    249 மரணங்களுடன் டெல்லி 2ம் இடத்தில் உள்ளது. உ.பி.யில் 187 பேர் ஒரேநாளில் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் முதல் அலை உச்சத்தில் கூட ஒரு நாளில் 1 லட்சம் பேரை கொரோனா தொற்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Muthukumar
    First published: