6 கோடி பேர் கடுமையான வறுமைக்குள் தள்ளப்படுவார்கள்: உலக வங்கி எச்சரிக்கை..!

வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளால், கடந்த 3 ஆண்டுகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் வீணாகும் நிலை

6 கோடி பேர் கடுமையான வறுமைக்குள் தள்ளப்படுவார்கள்:  உலக வங்கி எச்சரிக்கை..!
கோப்புப்படம்
  • Share this:
உலகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துள்ள நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளால் மேலும் 6 கோடி பேர் கடுமையான வறுமைக்குள் தள்ளப்படுவர் என உலக வங்கி எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக கொரோனா தொற்றின் புதிய மையமாக பிரேசில் உருவெடுத்துள்ளது. அந்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில், ஆயிரத்து 179 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2 லட்சத்து 71 ஆயிரம் பாதிப்புகளை கடந்துள்ள பிரேசில், மிக அதிகமாக பாதிக்கப்படும் 3-வது நாடாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஸ்பெயினில் பொதுஇடங்களுக்கு செல்வோர் 2 மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், இல்லையேல் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.


கொரோனா பரவல் காரணமாக 2021-ஆம் ஆண்டு கோடைகாலம் வரையிலான அனைத்து வகுப்புகளையும் ஆன்லைன் மூலம் நடத்தப் போவதாக பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் முழு கல்வியாண்டையும் இணையவழியில் நடத்துவதாக அறிவித்துள்ள முதல் பல்கலைக்கழகமாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மாறியுள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்களிடம் உள்ள மருத்துவ நிறுவனங்களை ஏற்று நடத்த ஜெர்மனி அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை கொரோனா சிகிச்சைகளுக்கான உபகரணங்கள் தடையின்றி கிடைக்க வழிவகுக்கும் என அந்நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் உள்ள மேலும் 6 கோடி மக்கள் கொடிய வறுமைக்குள் தள்ளப்படுவார்கள் என உலக வங்கி எச்சரித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளால், ஏற்பட்ட அனைத்து முன்னேற்றங்களையும் கொரோனா வீணாக்கி விடும் என்றும் உலக வங்கி அச்சம் தெரிவித்துள்ளது.Also see...


 
First published: May 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading