Explainer: கோவிட் நெகடிவ் ரிசல்டுக்கு பின்னும் அறிகுறிகள் இருக்கிறதா? செய்ய வேண்டியது என்ன?

மாதிரி படம்

இயல்பாக 2 முதல் 3 வாரங்கள் வரை கொரோனா நெகடிவ் டெஸ்டுக்குப் பிறகு கொரோனா அறிகுறிகள் இருக்கும். கடுமையான தொற்றுக்குள்ளானவர்களுக்கு 3 மாதங்கள் வரை வெவ்வேறு அளவுகளில் இருக்க வாய்ப்புகள் உள்ளது.

  • Share this:
கொரோனா வைரஸ் 2வது அலை நாடு முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், 3வது அலை வர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிப்பது மக்களிடையே இன்னும் பீதியை அதிகப்படுத்தியுள்ளது. 2வது அலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பலரும், கோவிட்-க்கு பிந்தைய மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

கோவிட் ரிசல்ட் நெகடிவ் வந்து ஒரு மாதத்தை கடந்த பிறகும் கடுமையான உடல்வலி, மனச்சோர்வு, தூக்கமின்மை, செரிமானப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்கள் என்ன செய்ய வேண்டும், என்னென்ன டெஸ்ட் எடுக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

கோவிட் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமாவது எளிதானதல்ல?

கொரோனா வைரஸ் பாதிப்பு சாதாரணம், மிதமான மற்றும் கடுமையான என 3 வகையாக பாதிக்கிறது. ஒருவரின் நோய் எதிர்ப்பு ஆற்றலை பொறுத்து பாதிப்பின் தன்மை இருக்கிறது. வைரஸின் தீவிரம் குறைந்தாலும் அது ஏற்படுத்திய பாதிப்பின் தீவிரத்தில் இருந்து முழுமையாக குணமாக சில காலமாகும். கடுமையான தொற்று ஏற்பட்டவர்களுக்கு நுரையீரல், மார்பு போன்ற பகுதிகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன.

Also Read:  மணமேடையில் மாப்பிள்ளை செய்த செயலால்... நெட்டிசன்கள் கொந்தளிப்பு

குறிப்பாக, நீரிழிவு போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு கோவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்காது. நோய் எதிர்ப்பு மண்டலம் இயல்பாக, அதற்கான காலத்தை எடுத்துக்கொள்ளும். கருப்பு பூஞ்சை, அவஸ்குலர் நெக்ரோசிஸ் பிரச்சனைகளை எதிர்கொண்டவர்களுக்கு கூடுதல் சிகிச்சைகள் தேவைப்படலாம்

கொரோனா குணமாக நீண்ட காலமாகும் என்பதை தெரிந்து கொள்வது எப்படி?

கொரோனா தொற்றின் தீவிரத்தைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் கொரோனா தொற்றின்போது இருந்த உடல்வலி, சோர்வு, செரிமான பிரச்சனைகள், பதட்டம் உள்ளிட்டவைகள் குணமாக காலம் எடுக்கும். இயல்பாக 2 முதல் 3 வாரங்கள் வரை கொரோனா நெகடிவ் டெஸ்டுக்குப் பிறகு கொரோனா அறிகுறிகள் இருக்கும். கடுமையான தொற்றுக்குள்ளானவர்களுக்கு 3 மாதங்கள் வரை வெவ்வேறு அளவுகளில் இருக்க வாய்ப்புகள் உள்ளது. பிற பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால், குணமாவது என்பது பாதிப்பின் நிலையை பொறுத்தது.

Also Read:   டோக்கியோ ஒலிம்பிக்கில் வழங்கப்படும் தங்கப்பதக்கத்தின் இந்திய மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மருத்துவரை எப்போது சந்திக்க வேண்டும்?

கடுமையான தொற்றுக்குள்ளாகி, மீண்டவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ரெகுலர் செக்கப் செய்து கொள்வது நல்லது. உங்களுக்கு இருக்கும் அறிகுறிகளின் அடிப்படையில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம். கடுமையான உடல் வலி, மன நலம் ஆரோக்கியமின்மை ஆகியவை இருந்தால் மருத்துவரை சந்திப்பது நலம்.

மாதிரி படம்


கொரோனா தவிர்த்து பிற பிரச்சனைகள் உடலில் ஏற்பட்டிருந்தால், அதனை புறக்கணிக்காமல் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும். அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஆலோசனை மையங்களுக்கு சென்று தங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளைக் கூறி, மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளலாம். இதயம், சுவாசம் சார்ந்த பிரச்சனைகளை புறக்கணிக்க வேண்டாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்னென்ன டெஸ்ட் எடுக்க வேண்டும்?

ரத்த பரிசோதனை, மார்பு, சி.ஆர்.பி, கார்டியாக் ஸ்கிரீனிங், நியூரோ செயல்பாடு உள்ளிட்ட டெஸ்டுகளை மருத்துவரின் பரிந்துரையின்பேரில் எடுக்க வேண்டும்.
Published by:Arun
First published: