அமெரிக்கப் பெண்ணிற்கு கொரோனாவுக்கான தடுப்பூசி! கைகூடுமா முதல் சோதனை முயற்சி

அமெரிக்கப் பெண்ணிற்கு கொரோனாவுக்கான தடுப்பூசி! கைகூடுமா முதல் சோதனை முயற்சி
  • Share this:
அமெரிக்காவில் தன்னார்வலப் பெண் ஒருவருக்கு முதன் முறையாக கொரோனா தடுப்பூசி சோதனை செய்யப்பட்டுள்ளது. 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 192 நாடுகளில் தடம் பதித்துள்ளது. தற்போது சீனாவில் கட்டுபாட்டில் உள்ள இந்த வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் கோரத்தாண்டவமாடி வருகிறது.

கொரோனா வைரஸ்க்கு இதுவரை எந்த மருந்து மற்றும் தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கவில்லை. வல்லரசு நாடுகள் அனைத்தும் கொரோனவைத் தடுக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் கைசர் பெர்மனெட் வாஷிங்டன் ஆராய்ச்சி நிறுவனம் முதல்கட்டமாக பெண் தன்னார்வலருக்கு கையில் தடுப்பூசி ஒன்றை சோதனை முயற்சியாக போட்டுள்ளது.  இந்த சோதனையின் முடிவுக்காக ஆராய்ச்சியாளர்கள் காத்து உள்ளனர்.


கொரோனவிற்கான தடுப்பூசி சோதனை செய்த பெண் இதுகுறித்து கூறுகையில், “நாங்கள் அனைவரும் மிகவும் உதவியற்றவர்களாக உணர்கிறோம். ஏதாவது செய்ய வேண்டும் என்று உணர்ந்திருந்தேன். எனக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பு“ என்றார்.

இந்த சோதனையின் முடிவு விரைவில் தெரிய வரும் அதன் பின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்படும் என்று கொரோனா தடுப்பூசி ஆய்வு மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Also see:
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading