கொரோனாவால் கதிகலங்கும் அமெரிக்கா... இத்தாலியில் உயிரிழப்பு 10 ஆயிரத்தை கடந்தது...!

கொரோனாவால் கதிகலங்கும் அமெரிக்கா... இத்தாலியில் உயிரிழப்பு 10 ஆயிரத்தை கடந்தது...!
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: March 29, 2020, 9:42 AM IST
  • Share this:
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில் அமெரிக்காவில் ஒரே நாளில் 19 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 19 ஆயிரத்து 302 பேர் வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானது தெரியவந்துள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நாள் முதல், உலக நாடுகளில் ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.

இதனால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 428 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 515 பேர் உயிரிழந்த நிலையில் இறப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 211 ஆக உயர்ந்துள்ளது.


கொரோனா தொற்றுக்கு நேற்று 889 பேர் பலியான நிலையில் இத்தாலியில் இறப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 23 பேர் ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் அதிக அளவாக 844 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு இதுவரை 5 ஆயிரத்து 982 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

உலக அளவில் இதுவரை 6 லட்சத்து 62 ஆயிரத்து 967 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 30 ஆயிரத்து 851 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTubeFirst published: March 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading