ஹைட்ராக்ஸி குளோரோகுயினுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து: அமெரிக்கா அதிரடி

ஹைட்ராக்ஸி குளோரோகுயினுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து: அமெரிக்கா அதிரடி
ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்
  • Share this:
கொரோனாவிற்கு சிகிச்சையளிக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கு வழங்கப்பட்ட அவசர அங்கீகாரத்தை அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ரத்து செய்துள்ளது.

பல்வேறு ஆய்வுகளில் இருந்து கிடைத்த முடிவுகளின் படி, இந்த மருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவிதமான பயனையும் அளிக்கவில்லை என்றும், நோய்த்தொற்றின் கால அளவையோ அல்லது மரண அபாயத்தையோ குறைக்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.இதனால் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க வழங்கக்கூடாது என்று தெரிவித்துள்ள உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, மற்ற வழக்கமான பயன்பாட்டிற்கு தடையில்லை என்று தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க...

BREAKING | சீனா உடன் மோதல் - இந்திய ராணுவ வீரர்கள் இருவர் உயிரிழப்பு 
First published: June 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading