டிரம்பையும் விட்டுவைக்காத கொரோனா அச்சுறுத்தல்...!

டிரம்பையும் விட்டுவைக்காத கொரோனா அச்சுறுத்தல்...!
டிரம்ப்
  • News18
  • Last Updated: March 7, 2020, 12:51 PM IST
  • Share this:
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரஸ், அமெரிக்க அதிபரையும் விட்டுவைக்கவில்லை. 

இந்தியாவில் டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் 31 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லியில் இரண்டு பேர், குருகிராம், ஐதராபாத், காசியாபாத் நகரங்களில் தலா ஒருவரும், ஆக்ராவில் 6 பேரும், ஜெய்பூரில் ஒரு இந்தியர் மற்றும் 16 இத்தாலியர் உள்பட 17 பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.




31வது நபராக டெல்லியில் கொரோனாஉறுதி செய்யப்பட்டவர் உத்தம் நகரைச் சேர்ந்தவர் என்றும் அண்மையில் மலேசியா மற்றும் தாய்லாந்துக்கு சென்று வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. இதுதவிர 13 ஈரானிய சுற்றுலாப் பயணிகள் அமிர்தசரஸ் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.



கொரோனா வைரஸ் உருவான சீனாவில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது. அமெரிக்காவிலும் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்த நிலையில், கொரோனா அச்சத்தால், தன்னுடைய முகத்தையே தன்னால் தொடமுடியவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதங்கம் தெரிவித்துள்ளார். தன்னுடைய முகத்தை கூட தான் தொடக்கூடாது என வெள்ளை மாளிகை அதிகாரிகள், தனக்கு அறிவுறுத்தி இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.



மேலும், பொது மக்கள் கூடும் கூட்டத்தில் கலந்துகொள்வதை தவிர்க்கவும் அவருக்கு பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

உலகின் மிகச்சக்தி வாய்ந்த பதவியை வைத்துள்ள டொனால்ட் டிரம்பையும், கொரோனா அச்சுறுத்தல் விட்டுவைக்கவில்லை என இணையவாசிகள் விமர்சித்துள்ளனர்.




சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: March 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading