விற்பனைக்கு வந்தது கொரோனா சிகிச்சை மருந்தான ரெம்டெசிவிர்: 100 மில்லிகிராம் விலை 4000 ரூபாயாக நிர்ணயம்...

கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு மிகச் சிறந்த மருந்தாக கருதப்படும் ‘ரெம்டெசிவர்’ ஊசி மருந்தை முதன்முதலாக ‘சிப்லா’ நிறுவனம் ”Cipremi” என்னும் பெயரில் இந்தியாவில்  அறிமுகப்படுத்தியுள்ளது.

விற்பனைக்கு வந்தது கொரோனா சிகிச்சை மருந்தான ரெம்டெசிவிர்: 100 மில்லிகிராம் விலை 4000 ரூபாயாக நிர்ணயம்...
ரெம்டெசிவிர்
  • Share this:
கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு மிகச் சிறந்த மருந்தாக கருதப்படும் ‘ரெம்டெசிவிர்’ ஊசி மருந்தை முதன்முதலாக ‘சிப்லா’ நிறுவனம் ”Cipremi” என்னும் பெயரில் இந்தியாவில்  அறிமுகப்படுத்தியுள்ளது.

100 மில்லி கிராம் அடங்கிய ஒரு மருந்து பாட்டிலின் விலை ரூ.4000-ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 7.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக் கப்பட்டுள்ளனர். இதுவரை இந்த தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், டெக்ஸ்மெத்தசோன், ரெம்டெசிவிர் போன்ற பயனளிக்கும் மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கான காப்புரிமை கொண்டிருக்கும் அமெரிக்காவின் Gilead sciences நிறுவனத் திடம் உரிய அனுமதி பெற்று, இந்தியாவைச் சேர்ந்த 5 மருந்து நிறுவனங்கள் இந்த மருந்தை உற்பத்தி செய்யத் தொடங்கின. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிப்லா, ஹைதராபாத்தைச் சேர்ந்த ஹெட்டேரோ, மைலான் என்.வி., உட்பட ஐந்து நிறுவனங்கள் இந்த வேலையில் இறங்கின.


மும்பையைச் சேர்ந்த ‘சிப்லா’ நிறுவனம் இந்தியாவில் முதன்முதலாக ‘ரெம்டெசிவர்’ ஊசி மருந்தை ‘சிப்ரெமி’ என்ற பெயரில் நேற்று சந்தைப்படுத்தியுள்ளது. 100 மில்லி கிராம் அடங்கிய இந்த ‘ரெம்டெசிவர்’ மருந்தின் விலை ரூ.4000-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இம்மாத இறுதிக்குள் 80,000 மருந்து Vial-களை உற்பத்தி செய்ய இருப்பதாக தெரிவித்துள்ள சிப்லா, உலக நாடுகள் நிர்ணயித்துள்ள விலையை ஒப்பிட்டால் இதுதான் மிகக் குறைவானது என்று தெரிவித்திருக்கிறது.
First published: July 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading