கொரோனா வைரஸ் தோன்றலில் நீடிக்கும் சர்ச்சை - பரபரப்பை ஏற்படுத்தியுள்ள புதிய ஆய்வு
கொரோனா வைரஸ் தோன்றலில் நீடிக்கும் சர்ச்சை - பரபரப்பை ஏற்படுத்தியுள்ள புதிய ஆய்வு
உடல் வலி, தொண்டை புண், காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், சோர்வு மற்றும் தலைவலி ஆகியவை இரண்டிற்கும் பொதுவான அறிகுறிகளாகும். ஒரு வித்தியாசம் என்னவென்றால் காய்ச்சல் உள்ளவர்கள் பொதுவாக முதல் வாரத்தின் போது மட்டும் சோர்வாக உணர்வார்கள். ஆனால், கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தின் போதும் மிக மோசமாக உணர்வார்கள், மேலும் அவர்கள் நீண்ட நாட்களுக்கு நோய்வாய் படக்கூடும்.
உலகின் எந்தவொரு பகுதியிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அறியப்படும் முன்னரே ஸ்பெயினில் கொரோனா கிருமிகள் பரவியிருந்தது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
பார்சிலோனா மாநகரத்தின் நீர் மேலாண்மையை நிர்வகிக்கும் ஐகஸ் டி பார்சிலோனா (Aigues de Barcelona) நிறுவனத்துடன் பார்சிலோனா பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வுக்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் சேகரிக்கப்பட்ட கழிவுநீரில் தற்போது உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது.
சீனாவின் ஊஹான் நகரில் முதன்முறையாக கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட நிலையில், அதற்கு 9 மாதங்களுக்கு முன்னதாகவே ஸ்பெயினில் வைரஸ் பரவி இருந்தது ஆய்வாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கொரோனா வைரஸ் தோன்றிய விதம் குறித்து சர்ச்சைகள் நீடித்து வரும் நிலையில் இந்த புதிய ஆய்வின் முடிவு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.