Home /News /coronavirus-latest-news /

கொரோனா அச்சம் - திருப்பதியில் பக்தர்களை காத்திருப்பு அறையில் அடைக்காமல் நேரடியாக தரிசனத்திற்கு அனுப்ப முடிவு

கொரோனா அச்சம் - திருப்பதியில் பக்தர்களை காத்திருப்பு அறையில் அடைக்காமல் நேரடியாக தரிசனத்திற்கு அனுப்ப முடிவு

திருப்பதி

திருப்பதி

"300 ரூபாய் தரிசன டிக்கெட், தங்கும் அறைகள் உள்ளிட்ட முன்பதிவை திருப்பதி தேவஸ்தானம் மே ஒன்றாம் தேதி வரை ரத்து செய்துள்ளது"

  • News18
  • Last Updated :
    கொரோனா பரவுதல் அச்சம் காரணமாக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களை, 17-ம் தேதி முதல் காத்திருப்பு மண்டபத்தில் அடைக்காமல் தரிசனத்திற்கு அனுப்ப தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், தற்போது வரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 100 ஐ நெருங்கியுள்ளது. டெல்லி மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த இருவர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனா தாக்கம் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறைகள் விடப்பட்டுள்ளன. திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் மூடப்பட்டுள்ளன.

    பொது மக்கள் கூட்டமாக கூட வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. சபரிமலை, திருப்பதி போன்ற பிரபல ஆன்மீக தளங்களும் பக்தர்கள் வருகை தருவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளன.

    கொரோனா அச்சம் எதிரொலியாக, 300 ரூபாய் தரிசன டிக்கெட், தங்கும் அறைகள் உள்ளிட்ட முன்பதிவை திருப்பதி தேவஸ்தானம் மே ஒன்றாம் தேதி வரை ரத்து செய்துள்ளது. ஆந்திராவில் முதல் கொரோனா பாதிப்பும் ஏற்பட்டுள்ளதை அடுத்து, தேவஸ்தானம் இந்த நடவடிக்கை எடுத்து உள்ளது.,

    மேலும், வரும் 17-ம் தேதி முதல் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்வதற்கான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும் டோக்கன்களை வழங்கி, அவர்களை காத்திருப்பு மண்டபங்களில் அடைத்து வைக்காமல் நேரடியாக சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுப்பிவைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில், பல மணி நேரமாக காத்திருந்து ஏழுமலையானை வழிபடும் நிலையில், மக்கள் ஒரே இடத்தில் கூடுவதால் வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால் இந்த முறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.




    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube



    Published by:Sankar
    First published:

    Tags: CoronaVirus, Tirupathi

    அடுத்த செய்தி