• HOME
 • »
 • NEWS
 • »
 • coronavirus-latest-news
 • »
 • கொரோனா வைரஸ் தொற்று பரவ அதிக வாய்ப்பு - 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை

கொரோனா வைரஸ் தொற்று பரவ அதிக வாய்ப்பு - 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

 • News18
 • Last Updated :
 • Share this:
  இந்தியாவில் கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பரவும் ஆபத்து அதிகம் உள்ளதாக 6 மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

  இந்தியாவில் டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் 31 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லியில் இரண்டு பேர், குருகிராம், ஐதராபாத், காசியாபாத் நகரங்களில் தலா ஒருவரும், ஆக்ராவில் 6 பேரும், ஜெய்பூரில் ஒரு இந்தியர் மற்றும் 16 இத்தாலியர் உள்பட 17 பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

  31வது நபராக டெல்லியில் கொரோனாஉறுதி செய்யப்பட்டவர் உத்தம் நகரைச் சேர்ந்தவர் என்றும் அண்மையில் மலேசியா மற்றும் தாய்லாந்துக்கு சென்று வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. இதுதவிர 13 ஈரானிய சுற்றுலாப் பயணிகள் அமிர்தசரஸ் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் காணொளி காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள், தனிமைப்படுத்தும் வார்டுகள், ஆய்வகங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

  இதைத் தொடர்ந்து பல அமைச்சகங்களுடன் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதார அமைச்சகம், மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநிலங்களையும் அறிவுறித்தி உள்ளது. அவசர உதவிக்காக 24 மணி நேரமும் செயல்படும் +91-11-2397 8046 என்ற தொலைபேசி எண்ணையும், ncov2019@gmail.com என்ற மின்னஞ்சலையும் அறிவித்துள்ளது.

  இதற்கிடையே, கொரோனா பாதிக்கும் அபாயம் உள்ள மேற்கு வங்கம், பீகார், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், சிக்கிம் ஆகிய 6 மாநிலங்கள் விழிப்புடன் இருக்குமாறும்

  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் சுற்றறிக்கை மூலம் மத்திய அரசு எச்சரித்துள்ளது. தொற்றுநோய் தொடர்பாக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகள் குறித்தும் ஆலோசனைகளை பட்டியலிட்டுள்ளது.

  கொரோனா தொற்றை அடுத்து வெளிநாட்டு சுற்றுப்பயணிகளுக்கு சிக்கிம் அரசு தடை விதித்துள்ளது. மலைவாச ஸ்தலமான மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் ஹோட்டல்கள் அனைத்தும் முன்பதிவுகளை ரத்து செய்துள்ளன. சீன எல்லையான நாது லாவுக்கு செல்லக்கூடாது என்ற பொது எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. மார்ச் 13-ம் தேதி நாடு முழுவதும் நடைபெறவிருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களின் அணிவகுப்பும், 2020-ம் ஆண்டுக்கான ஐஃபா விருது நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மார்ச் 29-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி மிகுந்த பாதுகாப்புடன் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

  இதற்கிடையே, குடியரசுத் தலைவர் மாளிகையில் இருக்கும் முகல் தோட்டம் மார்ச் 7 ஆம் தேதி முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று நாடாளுமன்றத்துக்கு எம்.பி.க்களுடன் பார்வையாளர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sankar
  First published: