தமிழகத்தில் புதிதாக 1688 பேருக்கு கொரோனா தொற்று... உயிரிழப்பு 18

மாநிலம் முழுவதும் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,568-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக 1688 பேருக்கு கொரோனா தொற்று... உயிரிழப்பு 18
கோப்பு படம்
  • Share this:
தமிழகத்தில் புதிதாக 1688 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவிலிருந்து 2173 பேர் குணமடைந்துள்ள நிலையில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.


தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் புதிதாக 1688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7,66,677-த்தை கடந்துள்ளது.


சென்னையில் கொரோனா பாதிப்பு, படிப்படியாகக் குறைந்து, நீண்ட நாட்களுக்குப் பிறகு 500-க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. இதன்படி, புதிதாக 489 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  மாநிலம் முழுவதும் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,568-ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 2,173 பேர் குணமடைந்தனர். இதனால், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 7,41,705 ஆக உள்ளது.

நாடு முழுவதும் பரவும் கொரோனா குறித்த தற்போதைய விரிவான தகவல்கள்
First published: November 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading