தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 5,000-ஐ கடந்தது

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 5,000-ஐ கடந்தது

கோப்புப்படம்

கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 1752 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5441 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1890 குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில் 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    இது தொடர்பாக சுகாரதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 5441 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த கொரோனா பாதிப்பு 9,20,827 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 1752 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தப்படியாக கோவையில் 473 பேருக்கும் செங்கல்பட்டில் 465 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா பாதித்த 33,659 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்ற குணமடைந்து 1,890 பேர் வீடு திரும்பி உள்ள நிலையில் 8,74,305 பேர் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

    மேலும் சிகிச்சை பலனின்றி 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரேனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,863 ஆக உள்ளது.
    Published by:Vijay R
    First published: