தமிழகத்தில் புதிதாக 2184 பேருக்கு கொரோனா தொற்று... உயிரிழப்பு 28

மாநிலம் முழுவதும் 28 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 415-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக 2184 பேருக்கு கொரோனா தொற்று... உயிரிழப்பு 28
கோப்பு படம்
  • News18 Tamil
  • Last Updated: November 15, 2020, 10:08 AM IST
  • Share this:
தமிழகத்தில் புதிதாக 2 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு, படிப்படியாகக் குறைந்து, 571-ஆக பதிவாகியுள்ளது. இதனால், சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 6 ஆயிரத்து 588-ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டங்களில் ஆயிரத்து 613 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் 28 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 415-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 2 ஆயிரத்து 210 பேர் குணமடைந்தனர். இதனால், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 20 ஆயிரத்தை தாண்டியது. 18 ஆயிரத்து 655 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


ஒரே நாளில் 76 ஆயிரத்து 572 பேருக்கும், மொத்தமாக இதுவரை 1 கோடியே 5 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
First published: November 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading