தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை கடந்தது... இன்றைய பாதிப்பு நிலவரம்

9. அறிகுறியற்ற நபர்கள் மூலமும் தொற்றுநோய் பரவும்: கொரோனாவால் பாதிக்கப்பட்டு எந்த அறிகுறியும் இல்லாதவர்கள் மூலமும் தொற்று பிறருக்கு பரவும். மற்ற அறிகுறி நபர்களைப் போலவே அவை மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

சென்னையில் 775 பேருக்கும், செங்கல்பட்டில் 186 பேருக்கும், கோவையில் 185 பேருக்கும் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2089 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1241 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 775 பேருக்கும், செங்கல்பட்டில் 186 பேருக்கும், கோவையில் 185 பேருக்கும் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 8,77,279 பேருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா சிகிச்சை பலனின்றி 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,659 ஆக அதிகரித்துள்ளது.

    மேலும் கொரோனாவிலிருந்து 1241 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 8,52,563 பேர் கொரோனாவிலிருந்து விடுப்பட்டு வீடு திரும்பி உள்ளனர்.
    Published by:Vijay R
    First published: