நாட்டின் சராசரியை விட சென்னையில் ஏழு மடங்கு அதிக பரிசோதனை! தமிழகத்தின் நிலவரம் என்ன?

கடந்த 20 நாட்களில் சென்னையில் 10,665 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டின் சராசரியை விட சென்னையில் ஏழு மடங்கு அதிக பரிசோதனை! தமிழகத்தின் நிலவரம் என்ன?
(கோப்புப் படம்)
  • Share this:
தமிழகத்தில் 10 லட்சம் பேரில் 12,673 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தியாவின் சராசரியோடு ஒப்பிடுகையில், சென்னையின் பரிசோதனை 7 மடங்கும், மாநிலத்தின் பரிசோதனை 2.23 மடங்கு அதிகம் ஆகும்.

சென்னைக்கு அடுத்தபடியாக தேனியில் இதுவரை 92 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், 10 லட்சம் பேரில் சராசரியாக 7,145 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்ததாக, பெரம்பலூரில் 139 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 10 லட்சம் பேரில் 5,437 பேருக்கும், தஞ்சாவூரில் 76 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 10 லட்சம் பேரில்  5,433 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னையை அடுத்து அதிக தொற்று பாதிப்பு உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 லட்சம் பேரில்  3623 பேருக்கும், திருவள்ளூரில் 2646 பேருக்கும், கடலூரில் 2455 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.


ஒட்டுமொத்த மாநிலத்தின் பரிசோதனை விகிதத்தை விட, சென்னை, தேனி, பெரம்பலூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், கரூர், திருப்பத்தூர், கன்னியாகுமரி, திருவாரூர், வேலூர் ஆகிய 10 மாவட்டங்களில் அதிகமான பரிசோதனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது தொற்று இல்லாத மாவட்டங்களான, கோவையில் 10 லட்சம் பேரில் 3,135 பேருக்கும்,  திருப்பூரில் 1,489 பேருக்கும், ஈரோட்டில் 2,766 பேருக்கும், நாமக்கலில் 2,924 பேருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.நாளொன்றிக்கு சராசரியாக 11,000 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 3,60,068 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. திருப்பூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களைத் தவிர தமிழகத்தில் 35 மாவட்டங்களில் நாட்டின் சராசரியைக் காட்டிலும் கூடுதலாக பரிசோதனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஏப்ரல் 24ம் தேதி நிலவரப்படி  10 லட்சம் பேரில் 3096 பேருக்கும், மே 1ம் தேதி  நிலவரப்படி 10 லட்சம் பேரில் 5,225 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டிருந்த நிலையில், மே 19ம் தேதி நிலவரப்பட்டி 12,673ஆக அதிகரித்துள்ளது.

சோதனைகளைப் போன்றே தொற்று  எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மே 1ம் தேதி தமிழகத்தின் பரிசோதனை சராசரி 10 லட்சம் பேரில் 1,685ஆக இருந்தது. அப்போது தமிழகத்தின் பாதிப்பு எண்ணிக்கை 2,526ஆக இருந்தது. மே 1ம் தேதியுடன் ஒப்பிடுகையில் மாநிலத்தில் பரிசோதனை 2.41 மடங்கு அதிகரித்துள்ள நிலையில், பாதிப்பின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த 20 நாட்களில் சென்னையில் 10,665 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை நாட்டின் சராரியை விட 7 மடங்கு அதிகம் ஆகும்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.Also see:
First published: May 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading