• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கன்னியாகுமரிக்கு வெளிநாட்டில் இருந்து வந்த 2 பேருக்கு கொரோனா பரிசோதனை..!

கன்னியாகுமரிக்கு வெளிநாட்டில் இருந்து வந்த 2 பேருக்கு கொரோனா பரிசோதனை..!

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 563 பேர் பெருந்தொற்றால் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்புகள் 1,21,090-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 563 பேர் பெருந்தொற்றால் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்புகள் 1,21,090-ஆக உயர்ந்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை

  • Share this:
    கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வெளிநாட்டில் இருந்து வந்த 2 பேர் கொரோனா பரிசோதனைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 26 வயது இளைஞர் கத்தார் நாட்டில் இருந்து திரும்பியுள்ளார். அதேபோல், 40 வயது பெண் ஒருவரும் குவைத் நாட்டில் இருந்து திரும்பியுள்ளார். இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் இருமல், சளி தொல்லை இருந்து வந்துள்ளது. அதனால் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

    வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்பதால் அவர்களை கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் மருத்துவர்கள் அனுமதித்துள்ளனர்.

    இவர்களது ரத்தம், சளி மாதிரிகள் பரிசோதனைக்காக திருநெல்வேலி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

    Also see...






    இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: