கொரோனா நிவாரணத் தொகையாக கூடுதலாக ₹1000 கோடி - டாடா சன்ஸ்

கொரோனா நிவாரணத் தொகையாக கூடுதலாக ₹1000 கோடி - டாடா சன்ஸ்
  • Share this:
 கொரேனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்பை தீர்க்க கூடுதலாக 1000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக டாடா சன்ஸ் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடும் நிலையில் இந்தியாவில் இதுவரை 933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

கொரோனா தொற்றை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் பொருளாதார ரீதியில் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பல கோடி ரூபாய் தேவைப்படுவதால் மக்கள் தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து பிரதமர் பேரிடர் நிவாரண நிதியில் தங்களால் முயன்ற நிதியை அளித்து வருகின்றனர்.

இதனிடையே கொரோனா பாதிப்புக்கு உதவ 500 கோடி ரூபாய் அளிப்பதாக ரத்தன் டாடா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். அதில், “இக்கட்டான சூழ்நிலைகளில் டாடா அறக்கட்டளை மற்றும் டாடா குழும நிறுவனங்கள் அதற்காக உதவி உள்ளன. தற்போது முன் எப்போதும் இல்லாததை விட இந்த தருணத்தில் களத்தில் இறங்குவதற்கான தேவை அதிகமாக உள்ளது“ என்றுள்ளார்.

தற்போது ஏற்கனவே அறிவித்த 500 கோடியை விட கூடுதலாக 1000 கோடி ரூபாய் வழங்க உள்ளதாக டாடா சன்ஸ் தெரிவித்துள்ளது. “கொரோனா வைரஸால் இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது கவலையளிக்கிறது, இந்த தருணத்தில் எங்களில் சிறந்த நடவடிக்கை தேவைப்படுகிறது“ என்றும் தெரிவித்துள்ளது.

சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading