தமிழகத்தில் கொரோனா - மாவட்டம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை

 • News18
 • Last Updated :
 • Share this:
  தமிழகத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்தியாவில் அதிகம் பாதிப்புள்ள மாநிலங்களில் இரண்டாம் இடத்தில் தமிழகம் தற்போது உள்ளது.

  தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக இருந்தது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்த மாவட்டங்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளது மேலும் கோரோனா பாதிப்பு இருந்த குடும்பத்தினர் அவர்கள் அந்த அந்த மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கொரோனா சோதனை செய்யப்பட்டு தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

  இதனை அடுத்து, தமிழக பொதுசுகாதாரத்துறையின் மூலமாக செய்தி தாள்களில் மக்களுக்கு ஒரு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது அதில் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பரவ அதிக வாய்ப்புள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றும் இது போன்ற பாதிப்பு யாருக்காவது தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்தால் உடனே அரசு அதிகாரிகளுக்கு தெரியபடுத்த வேண்டும் என்றும் அறிவிங்கப்பட்டுள்ளது.

  மேலும் வணிக நிறுவனங்கள் மக்கள் கூடும் இடங்களில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது இதை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மீது சுகாதார சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுசுகாதாரத்துறை அறிவித்துள்ளது

  இந்த நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் இன்று பேட்டியளிக்கையில், இன்று 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுவரை, தமிழகத்தில் தொற்று உறுதியானவர்களில் 264 பேடெல்லி சென்று திரும்பியவர்கள் ஆவார்.

  இதன் மூலம், தமிழகம் இந்தியாவிலேயே அதிக பாதிப்புகளைக் கொண்ட இரண்டாவது மாநிலமாக இருக்கிறது. மஹாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது.

  இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 75 பேரில் 74 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் ஆவார்.  இன்று அதிகபட்சமாக சென்னையில் 20 பேருக்கும், கரூரில் 15 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் 6 பேர், நெல்லையில் ஒருவர், செங்கல்பட்டில் 7 பேர், திருப்பத்தூரில் 3 பேர், விருதுநகரில் 9 பேர், திருவாரூரில் 5 பேர், ராணிபேட்டையில் 4 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது  தூத்துக்குடியில் 2 பேர், ராமநாதபுரத்தில் 3 பேர் மற்றும் திருவள்ளூரில் ஒருவருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரோட்டில் 32 பேரும், நெல்லையில் 30 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Sankar
  First published: