தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலை என்ன...?

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலை என்ன...?
கோப்புப்படம்
  • Share this:
தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மார்ச் 20-ம் தேதி வரை 3 பேர் நோய் தொற்றுக்கு ஆளான நிலையில், ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருந்தார். அதன் பின் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தலா மூவர் வீதம் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மார்ச் 24-ம் தேதி 6 பேருக்கும், 25ம் தேதி 8 பேருக்கும், 26-ம் தேதி மூன்று பேருக்கும் கொரோனா பரவியது. அதிகபட்சமாக வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

அதில், கொரோனா தொற்று கண்டறியப்பட்ட அரியலூரை சேர்ந்த 25 வயது பெண் சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் பணியாற்றி வந்ததும், உடல்நலக்குறைவால் கடந்த 9-ம் தேதி சொந்த ஊர் திரும்பியதும் தெரியவந்துள்ளது. அரியலூர் அரசு மருத்துவமனையில் 20-ம் தேதி அனுமதிக்கப்பட்ட அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரில் 39 வயது நபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அவர் முதுகலை பட்டம் பயின்று வரும் அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாணவர் தங்கும் விடுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி சார்பில் தங்கும் விடுதியில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.


இந்நிலையில், தமிழகத்தில் சனிக்கிழமை புதிதாக இருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அண்மையில் மேற்கிந்திய தீவுகளில் இருந்து திரும்பிய கும்பகோணத்தை சேர்ந்த 42 வயது நபருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று பிரிட்டனில் இருந்து வந்த காட்பாடியை சேர்ந்த 49 வயது நபர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் மத்திய கிழக்கு நாடுகள் வழியாக பயணித்ததாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இரு நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் பணியும் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த 2 லட்சத்து 9 ஆயிரத்து 284 பேர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 13 ஆயிரத்து 323 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் மற்றும் 3 ஆயிரத்து 44 வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன. 277 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.ஆயிரத்து 500 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், ஆயிரத்து 252 மாதிரிகளில் நோய் தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது.

இன்னும் 208 மாதிரிகளின் பரிசோதனை முடிவு வெளியாகவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவர் சிகிச்சை முடிந்து குணமாகியுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.




இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: March 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading