தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 75 பேர் - முழு விபரங்கள்

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 75 பேர் - முழு விபரங்கள்
கோப்பு படம்
  • News18
  • Last Updated: April 2, 2020, 8:17 PM IST
  • Share this:
தமிழகத்தில் இன்று 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில்,  தமிழகத்தில் நேற்று வரை 234 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று மட்டும் மேலும் 75 பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவித்தார்.

இன்று உறுதியான நபர்களில் 74 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்றும் ஒருவர் சென்னையை சேர்ந்த நபர் எனவும் தெரிவித்தார். சென்னையை சேர்ந்த நபருக்கு, ஏற்கனவே நோய் தொற்று இருந்த நபர் மூலமாக பரவி உள்ளதாக தெரிவித்தார்.


நேற்று வரை 234 பேருக்கு உறுதியான நிலையில் இன்று உறுதியான 75 பேருடன் சேர்த்து மொத்தம் 309 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 19 மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக திருவள்ளூர் மாவட்டத்தில் நோய் தொற்று உறுதியாகியுள்ளதாகவும் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

டெல்லி மாநாட்டில் பங்கேற்று வந்தவர்களை கண்டறிந்து அவர்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவது சற்று சவாலாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.தற்போது 17 பரிசோதனை மையங்கள் உள்ளதாக தெரிவித்த அவர் புதிதாக தமிழகத்தில் 6 பரிசோதனை மையங்கள் விரைவில் செயல்பட உள்ளதாக தெரிவித்தார்.

பீனிக்ஸ் மாலில் பணியாற்றிய அரியலூரை சேர்ந்த நபருக்கு கேரளாவை சேர்ந்த நபர் மூலம் தொற்று பரவியதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த பீனிக்ஸ் மாலில் தொற்று உறுதியான நபருக்கு அதிக அளவிலான தொடர்புகள் இருப்பதாக கருதுவதாகவும் அவர்களையும் கண்டறிந்து வருவதாகவும் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.






இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading