சென்னை பீனிக்ஸ் மால் மூடப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன் அங்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்...!

சென்னை பீனிக்ஸ் மால் மூடப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன் அங்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்...!
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: April 1, 2020, 10:07 PM IST
  • Share this:
சென்னை பீனிக்ஸ் மாலில் பணியாற்றிய இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மூடப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் அங்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள சுகாதாரத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் மார்ச் மூன்றாவது வாரம் வரை 6 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன்பின் வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதால் இந்நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட பலருக்கு கொரோனா தொற்று கன்டறியப்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்தில், கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒருநாளில், 110 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.


இந்த நிலையில், சென்னை பீனிக்ஸ் மாலில் பணியாற்றிய அரியலூர் பெண் 30-வது நபராக பாதிக்கப்பட்டார். எனினும், அவருக்கு யார் மூலமாக தொற்று ஏற்பட்டது என்பது பற்றிய தகவல்கள் அரசின் செய்திக்குறிப்பில் இல்லை. இந்த நிலையில், அவருடன் பணியாற்றும் ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், சென்னை பீனிக்ஸ் மால் மூடப்படுவதற்கு பத்து நாட்கள் முன்பாக அங்கு வந்து சென்றவர்கள் தங்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அறிகுறிகள் இருந்தால் சுகாதாரத்துறையை தொடர்பு கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த மாதம் 15-ம் தேதி பீனிக்ஸ் மால் மூடப்பட்ட நிலையில், அதற்கு 10 நாட்களுக்கு முன்னர் அங்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், அறிகுறிகள் இருந்தால் சுகாதாரத்துறையினரை தொடர்பு கொள்ள வேண்டும்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: April 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading