கொரோனா பரவல் வாய்ப்புகள் என்னென்ன? நோய் கட்டுப்பாடு & தடுப்பு மையத்தின் புதிய தகவல்கள்

கொரோனா வைரஸ் மனிதனிடமிருந்தே மனிதனுக்கு அதிக அளவில் பரவும் என்றும், மாசுப்பட்ட மேற்பரப்பிலிருந்து எளிதில் பரவாது என்றும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் வாய்ப்புகள் என்னென்ன? நோய் கட்டுப்பாடு & தடுப்பு மையத்தின் புதிய தகவல்கள்
சென்னையில் ஊரடங்கை மீறி வந்த வாகன ஓட்டியிடம் போலீஸ் அறிவுறுத்தல் (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: June 9, 2020, 11:33 AM IST
  • Share this:
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம, கொரோனா வைரஸ் தொடர்பான மறுவரையறுக்கப்பட்ட நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன் படி தொற்று ஏற்பட்டுள்ள நபரிடமிருந்தே நோய் பரவும் வாய்ப்பு அதிகம் என்றும், வைரஸ் இருக்கும் மேற்பரப்புகளிலிருந்து எளிதாக பரவாது என்றும் கூறப்பட்டுள்ளது. இதேப்போல் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து பரவும் வாய்ப்பும் மிகக் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தும்மல் அல்லது பேசும் போது வெளியிடப்படும் நீர்துளிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக காணப்படும் என்றும், வைரஸ் பரவலுக்கு காரணமானவர், நோய் வாய்ப்புட்டிருக்கவோ, அறிகுறியுடனோ இருப்பது அவசியமல்ல என்றும் கூறியுள்ளது. 6 அடிக்கும் குறைவான இடைவெளியுடன் இருக்கும் போது வைரஸ் பரவல் அதிகமாக இருக்கும் என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனைகள், சிறைச்சாலைகள், கப்பல்களில் அதிகமாக நோய் பரவல் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள நோய் தடுப்பு மையம், பலர் ஒன்றாக கூடும் போதே அதிகமாக தொற்று ஏற்படுவதாக தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில், வாஷிங்டனில் நடந்த இசை பயிற்சியின் போது வைரஸ் தாக்கிய ஒருவர் தும்மியதால் 52 பேர் நோய்வாய் பட்டதாக CDC தெரிவித்துள்ளது.


நோய் தாக்கியவருடன் ஏற்படும் நேரடி தொடர்பினாலேயே ஒருவர் பாதிக்கப்படுவர் என்றும், அவர் கொடுக்கும் காகிதம் அல்லது கூரியர் ஆகியவற்றால் பரவல் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்றும் கூறியுள்ளது. பிளாஸ்டிக் மற்றும் உலோக மேற்பரப்பில் 3 நாள்கள் வரை வைரஸ் வாழும் என்ற போதிலும், அதன் வீரியம் சில மணி நேரங்களில் குறைந்து விடும் என்றும் தெரிவித்துள்ளது.

ஒருவருக்கு தொற்று ஏற்பட ஆயிரம் வைரஸ் துகள்கள் தேவைப்படுகின்றன. மூச்சு விடும் போது நிமிடத்திற்கு 20 வைரஸ் துகள்கள் உள் இழுக்கப்படுகின்றன. பேசும் போது நிமிடத்திற்கு 200 வைரஸ் துகள்கள் வெளியிடப்படுகின்றன. இருமல் மற்றும் தும்மலின் போது 200 மில்லியன் வைரஸ் துகள்கள் வெளியிடப்படுகின்றன. இவை காற்றோட்டம் இல்லாத இடங்களில், காற்றில் பல மணி நேரம் உயிர் வாழும்

6 அடி இடைவெளியுடன் 45 நிமிடங்கள் வரை இருக்கும் போது வைரஸ் பரவாது. பாதிக்கப்பட்டுவருடன் முகக்கவசம் அணிந்து 4 நிமிடங்களுக்குள் பேசினால் வைரஸ் தொற்று ஏற்படாது. காற்றோட்டம் மிக்க இடங்களிலுல் வைரஸ் பரவும் வாய்ப்பு குறைவு. ஆனால் மூடப்பட்ட இடங்களில் மக்கள் கூடும் போது வைரஸ் பரவல் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொது கழிப்பிடங்கள், பொது இடங்கள் வைரஸ் பரவலை வேகப்படுத்தும் இடங்களாகும்.அலுவலகங்கள், பள்ளிகள், ஓட்டல்கள், திருமண நிகழ்ச்சிகள், கேளிக்கை நிகழ்ச்சிகள், சினிமா அரங்குகள் ஆகியவை வைரஸ் பரவலை மிகவும் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. Gfx Out

Also See: தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் எவை... எவை...? - மாவட்டம் வாரியாக முழு பட்டியல்First published: June 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading