ஹோம் /நியூஸ் /கொரோனா /

வகுப்பு நண்பர்களின் நலன் கருதி நீண்ட விடுமுறை எடுக்கிறேன்...! காய்ச்சல் & சளி உள்ளதாக மாணவன் விடுப்பு விண்ணப்பம்

வகுப்பு நண்பர்களின் நலன் கருதி நீண்ட விடுமுறை எடுக்கிறேன்...! காய்ச்சல் & சளி உள்ளதாக மாணவன் விடுப்பு விண்ணப்பம்

Coronavirus | "காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை”

Coronavirus | "காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை”

Coronavirus | "காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை”

  • News18
  • 2 minute read
  • Last Updated :

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், தனக்கு காய்ச்சல், சளி இருப்பதால் விடுப்பு வேண்டும் என்று அரசுப்பள்ளி மாணவர் விளையாட்டாக எழுதிய கடிதம் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இன்று வரை நாடு முழுவதும் 54 பேர் வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காய்ச்சல் மற்றும் சளி ஆகியவை கொரோனா பாதிப்பின் அறிகுறிகள் என்பதால், பொது மக்களுக்கு சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கைகளை விடுத்துள்ளது. கேரளாவில் 7ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வை ரத்து செய்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை போரூரை அடுத்த முகலிவாக்கம் உயர்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பில் பயிலும் செல்வராஜ் என்ற மாணவர் தன்னுடைய வகுப்பு ஆசிரியருக்கு விடுமுறை வேண்டி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கடிதத்தில், தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரக் கூடிய சூழ்நிலையில் தனக்கு சளி மற்றும் காய்ச்சல் இருப்பதால் நீண்ட விடுமுறை அளிக்க வேண்டும் என மாணவர் எழுதிய விடுப்பு விண்ணப்பம் வைரலாகி வருகிறது.

மேலும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறையின் சுற்றறிக்கையை சுட்டிக்காட்டியுள்ள மாணவர், தான் வகுப்பிற்கு வந்தால் மற்ற மாணவர்களுக்கு காய்ச்சல் பரவும் என்பதால், வகுப்பு நண்பர்களின் நலன் கருதி தான் நீண்ட மருத்துவ விடுமுறை எடுத்துக் கொள்வதாகவும் கடிதத்தில் மாணவர் தெரிவித்துள்ளார்.

மேலும், விடுப்பு நாட்களை வருகை நாளாக பதிவு செய்யுமாறும் அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

மற்ற மாணவர்களுக்கு தன்னால் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்கிற மாணவரின் அக்கறை கடிதத்தில் ஒருபுறம் தெரிந்தாலும், சில மாணவர்கள் தாங்கள் பள்ளிக்கு வராமல் இருப்பதற்கு கொரோனோ வைரஸ் வேகமாக பரவிவருவதை சுட்டிக்காட்டி  பள்ளிக்கு மட்டம் தட்டவும். முயற்சிப்பார்கள் என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

மாணவனின் இந்த கடிதம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதனை அறிந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்த மாணவரை அழைத்து விசாரித்துள்ளார்.

அப்போது விளையாட்டாக விடுமுறை விண்ணப்ப கடிதம் எழுதியதாக மாணவர் தெரிவிக்க, தலைமை ஆசிரியர் கண்டித்துள்ளார். கடிதத்தை செல்போனில் படம் எடுத்து மற்ற மாணவர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு விட்டதாகவும் மாணவர் ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published:

Tags: CoronaVirus