கொரோனா பாதிப்பு: தனியார் வாகனங்களை இலவசமாக சுத்தம் செய்யும் மாநில அரசு!
ஆட்டோ, ரிக்ஷா, வாடகைக் கார் என பொது பயன்பாட்டில் உள்ள வாகனங்கள் மட்டும் சுத்தம் செய்யப்பட உள்ளன.

மாதிரிப்படம்
- News18
- Last Updated: March 18, 2020, 7:50 PM IST
கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக டெல்லியில் உள்ள அத்தனை தனியார் வாகனங்களையும் கிருமி நாசினி கொண்டு இலவசமாகவே தூய்மை செய்ய டெல்லி அரசு முடிவெடுத்துள்ளது.
தினமும் காலை, மாலை என இரு வேளைகளும் தனியார் வாகனங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய உள்ளது டெல்லி அரசு. ஆட்டோ, ரிக்ஷா, வாடகைக் கார் என பொது பயன்பாட்டில் உள்ள வாகனங்கள் மட்டும் சுத்தம் செய்யப்பட உள்ளன.
இரண்டு வேளைகளும் மாநகர பஸ் டெப்போக்களில் இத்தூய்மைப் பணி நடைபெற உள்ளது. பொதுப் பயன்பாட்டில் உள்ள அத்தனைத் தனியார் வாகனங்களும் கட்டாயமாக தங்களது வாகனங்களை வந்து சுத்தம் செய்துகொள்ள வேண்டும் என டெல்லில் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பார்க்க: அச்சுறுத்தும் கொரோனா... ஆறுதலாய் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்த ஃபேஸ்புக்!
தினமும் காலை, மாலை என இரு வேளைகளும் தனியார் வாகனங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய உள்ளது டெல்லி அரசு. ஆட்டோ, ரிக்ஷா, வாடகைக் கார் என பொது பயன்பாட்டில் உள்ள வாகனங்கள் மட்டும் சுத்தம் செய்யப்பட உள்ளன.
இரண்டு வேளைகளும் மாநகர பஸ் டெப்போக்களில் இத்தூய்மைப் பணி நடைபெற உள்ளது. பொதுப் பயன்பாட்டில் உள்ள அத்தனைத் தனியார் வாகனங்களும் கட்டாயமாக தங்களது வாகனங்களை வந்து சுத்தம் செய்துகொள்ள வேண்டும் என டெல்லில் அரசு உத்தரவிட்டுள்ளது.