கொரோனா அச்சம் : துப்பாக்கி வாங்க நீண்ட வரிசையில் நிற்கும் அமெரிக்க மக்கள்..!

அமெரிக்க மக்கள் கொரோனாவை விட கொள்ளையர்களிடமிருந்து தங்களை பாதுகாக்க அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் : துப்பாக்கி வாங்க நீண்ட வரிசையில் நிற்கும் அமெரிக்க மக்கள்..!
துப்பாக்கி வாங்க வரிசையில் நிற்கும் மக்கள்
  • Share this:
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் தற்காப்பிற்காக துப்பாக்கி வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச அளவில் கொரேனா வைரஸால் இதுவரை 6,500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 12 மாகணங்களில் கொரனோ வைரஸால் 3,774 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனா வைரஸ் காரணமாக 69 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்க மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். அமெரிக்காவில் கழிவறைக்கு பயன்படுத்தப்படும் பேப்பரை அதிகளவில் மக்கள் வாங்கி சேமித்து வைத்துக் கொள்வதால் அதற்கு மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சூப்பர் மார்க்கெட் அனைத்திலும் கழிவறையில் பயன்படுத்தப்படும் பேப்பர் விற்கப்படும் மேசை காலியாகவே இருக்கும் வீடியோ சமீபத்தில் வைரலானது.


தற்போது ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளில் கொள்ளையர்கள் தங்களது கைவரிசையைக் காட்டி வருகின்றனர். அவர்களிடமிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் பலர் துப்பாக்கி வாங்க ஆயுதம் விற்கும் கடைமுன் நீண்டவரிசையில் காத்திருக்கின்றனர். ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் 1500 ரூபாய் டாலர் கொடுத்து கைதுப்பாக்கி ஒன்றை வாங்கி உள்ளார். அவர் யு.எஸ்.ஏ டூடேக்கு அளித்த பேட்டியில் , இனி என் குடும்பம் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்றுள்ளார்.

22 வயதான இளம்பெண் துப்பாக்கிக்கு தேவைப்படும் தோட்டாக்களை வாங்கிய பின், “ஒரு வாரத்திற்கான உணவை எங்கள் வீட்டில் சேகரித்து வைத்துள்ளோம். கொள்ளையர்களிடமிருந்து தற்காத்து கொள்ள ஒரு பாதுகாப்பு தேவை. 2 மணி நேரம் காத்திருந்து இந்த தோட்டாக்களை நான் வாங்கி உள்ளேன்“ என்றுள்ளார்.

அமெரிக்க மக்கள் கொரோனாவை விட கொள்ளையர்களிடமிருந்து தங்களை பாதுகாக்க அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கலிஃபேர்னியா, நியூயார்க் மற்றும் வாஷிங்டன் மாகணங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது.

 
First published: March 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading