கொரோனா: ஒரு நாளைக்கு 1 லட்சம் மாஸ்க்... நாடு முழுவதும் இலவச உணவு - ரிலையன்ஸ் அறிவிப்பு

கொரோனா: ஒரு நாளைக்கு 1 லட்சம் மாஸ்க்... நாடு முழுவதும் இலவச உணவு - ரிலையன்ஸ் அறிவிப்பு
  • Share this:
ஒரு நாளைக்கு 1 லட்சம் முகக் கவசங்களை தயாரிக்க ரிலையன்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவும் விதமாகவும், அத்தியாவசிய பொருளாக அறிவிக்கப்பட்டுள்ள முகக் கவசத்தை அதிகமாக தயாரிக்கும் பொருட்டும், ரிலையன்ஸ் அறக்கட்டளை, ரிலையன்ஸ் சில்லறை விற்பனை, ரிலையன்ஸ். லைஃப் சயின்சஸ், ஜியோ உள்ளிட்ட ரிலையன்ஸ் குடும்ப உறுப்பினர்கள் இந்தத் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டில் நிலவும் நெருக்கடியான இச்சூழ்நிலையில் பல்வேறு நகரங்களில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இலவச உணவு வழங்கத் திட்டமிட்டுள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளை, மக்களுக்குத் தேவையான வாழ்வாதார நிவாரணங்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.


கொரோனா நோயாளிகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்களுக்குத் தேவையான எரிபொருள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள ரிலையன்ஸ், இந்தியாவிலேயே அதிகம் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மகாராஷ்டிராவில் அம்மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ரிலையன்ஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
மேலும் படிக்க: கேரளாவில் அரசு உத்தரவை மீறி ஜெபக் கூட்டம் ஏற்பாடு செய்த பாதிரியார் கைது!
First published: March 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்