கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிபெற எல்லாமே செய்வோம் - முகேஷ் அம்பானி

கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிபெற எல்லாமே செய்வோம் - முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி
  • News18
  • Last Updated: March 30, 2020, 9:53 PM IST
  • Share this:
கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 15-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தங்களால் முடிந்த நிதியை தருமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்காக ‘பிஎம் கேர்’ என்ற தனி கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் கோரிக்கையை அடுத்து பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள், பாதுகாப்பு படைப்பிரிவுகள் மற்றும் அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் நிதியை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சார்பில் ரூ. 500 கோடி நிதி அளிக்கப்பட்ட உள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “பிஎம் கேருக்கு ரூ.500 கோடி அளிப்பதுடன், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலத்திற்கு தலா ரூ.5 கோடி, கொரோனா நிவாரணமாக அளிக்கப்பட உள்ளது.


மேலும், இந்தியாவில் முதல்முதலாக 100 படுக்கைகள் கொண்ட கொரோனா தனி மருத்துவமனையை இரண்டே வாரங்களில் தயார் செய்து, கொரோனா பாதித்தவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 5 லட்சம் இலவச உணவு தயாரித்து விநியோகிக்கப்பட உள்ளது.

சுகாதாரத்துறை பணியாளர்களுக்காக ஒரு லட்சம் மாஸ்க்குகள் தினசரி வழங்கப்படுகிறன. மற்றும் கொரோனா பாதித்தவர்களை கையாளும் மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பு கவச உடை ஆயிரக்கணக்கில் வழங்கப்படுகின்றன. ஆம்புலன்ஸ் போன்ற அவசர சேவை வாகனங்களுக்கு இலவசமாக எரிபொருட்கள் வழங்கப்படுகிறன.

வீடுகளில் இருந்து பணியாற்றுபவர்கள் மற்றும் வீட்டில் இருந்து பிற வேலைகளுக்காக இணையதளத்தை நாடியுள்ளவர்களுக்கு ஜியோ மூலமாக அதிக டேட்டா வழங்கப்படுகிறது. 40 கோடி பேர் இதனால் பயனடைகின்றனர்.மேலும், ரிலையன்ஸ் ரீடைல் அத்தியாவசிய சேவையாக தினம்தோறும் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வீடு தேடி வந்து அளிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கூறுகையில், “கொரோனா பிரச்னைகளில் இருந்து இந்தியா மீண்டெழும். அதற்கான உதவிகளை மேற்கொள்ள உறுதியாக உள்ளோம். ஒட்டுமொத்த ரிலையன்ஸ் குழுமமும், துயரமான இந்த தருணத்தில் நாட்டுடன் நின்று கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற எல்லாமே செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் பவுண்டேஷன் தலைவர் நிட்டா அம்பானி கூறுகையில், “கொரோனாவுக்கு எதிராக தேசம் போராடும் போது ரிலையன்ஸ் பவுண்டேஷன், முன் வரிசையில் இருந்து பாதிக்கப்பட்ட அனைவருக்குமான நிற்கும். குறிப்பாக, மருத்துவர்கள் மற்றும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் அனைவருக்கும் ரிலையன்ஸ் பவுண்டேஷன் துணையாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.






இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: March 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading