சீனாவில் கொரோனா தனிமை முகாம் இடிந்து விழுந்து விபத்து...! 70 பேரின் நிலை கேள்விக்குறி

Coronavirus | "கொரோனாவால் சீனா துன்பப்படும் நிலையில், இந்த விபத்து மேலும் ஒரு அடியாக அமைந்துள்ளது"

சீனாவில் கொரோனா தனிமை முகாம் இடிந்து விழுந்து விபத்து...! 70 பேரின் நிலை கேள்விக்குறி
Coronavirus | "கொரோனாவால் சீனா துன்பப்படும் நிலையில், இந்த விபத்து மேலும் ஒரு அடியாக அமைந்துள்ளது"
  • News18
  • Last Updated: March 8, 2020, 9:01 AM IST
  • Share this:
சீனாவில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்தவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த தனிமை முகாம் இடிந்து விழுந்ததில் 70-க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

சீனாவின் ஊஹான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனை அடுத்து, இந்த வைரஸ் அந்நாடு முழுவதும் மிக வேகமாக பரவியது.

தற்போது, உலக நாடுகளுக்கே அச்சுறுத்தலாக கொரோனா மாறியுள்ளது. 97 நாடுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் மட்டும் இதற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.


கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்தவர்கள் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து பரிசோதனைகள் நடந்துகொண்டு இருக்கின்றன.

பல ஹோட்டல்கள், மைதானங்கள், பொது கட்டடங்கள் தற்காலிகமாக தனிமை முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன.இன்று காலை, சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள குவான்சோவ் என்ற நகரத்தில் இருக்கும் தனிமை முகாம் திடீரென இடிந்து விழுந்துள்ளது. எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ஹோட்டலாக இருந்த இந்த கட்டடத்தில், 70-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்துவதற்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளனர்? உயிரழப்பு இருக்கிறதா? என்பது போன்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

கொரோனாவால் சீனா துன்பப்படும் நிலையில், இந்த விபத்து மேலும் ஒரு அடியாக அமைந்துள்ளது.
Also Read: கொரோனா பரவலை தடுக்க அனைவரும் முக கவசம் அணிய வேண்டுமா? மருத்துவர்கள் விளக்கம்
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTubeFirst published: March 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading