கொரோனா வைரஸ்: தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

தமிழகத்திலுள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

கொரோனா வைரஸ்: தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
(கோப்புப் படம்)
  • Share this:
கொரோனா வைரஸை எதிர்கொள்ள, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சீனாவைத் தொடர்ந்து, உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. இந்நிலையில், சேலம் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர், இருமல், காய்ச்சல் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சனைகள் இருக்கும்பட்சத்தில் உடனடியாக அரசு மருத்துவமனையை நாட வேண்டுமென தெரிவித்தார். மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தனி வார்டு, மருந்துகள் உள்பட முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.


கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என அமைச்சர் அறிவுறுத்தினார். இந்த வைரஸ் தாக்கினால் 2 சதவீதம் மட்டுமே உயிரிழக்க வாய்ப்பு உள்ளதாகவும், முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் வைரஸ் தாக்காது என்றும், தாக்கினாலும் எளிதில் குணப்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்திலுள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.

கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள், 14 நாட்கள் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறிய விஜயபாஸ்கர், கொரோனா விழிப்புணர்வு தொடர்பான குறும்படம் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்ட தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், பயணிகள் என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என அறிவுரைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் விதிகளுக்கு உட்பட்டு, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், பிரத்யேக வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

Also see...
First published: March 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading