தமிழகத்தில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று... இன்றைய பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று... இன்றைய பாதிப்பு நிலவரம்

கோப்பு படம்

கொரோனா சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 6 பேர் மற்றும் அரசு மருத்துவமனயில் 6 பேர் என 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • Share this:
    தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1636 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1023 பேர் குணமடைந்துள்ள நிலையில், 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1636 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 633 பேருக்கும், செங்கல்பட்டில் 178 பேருக்கும், கோவையில் 133 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 8,71,440 பேருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 6 பேர் மற்றும் அரசு மருத்துவமனயில் 6 பேர் என 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,630 ஆக அதிகரித்துள்ளது.

    மேலும் கொரோனாவிலிருந்து 1023 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 8,49,064 பேர் கொரோனாவிலிருந்து விடுப்பட்டு வீடு திரும்பி உள்ளனர்.
    Published by:Vijay R
    First published: