நீண்ட நாட்களுக்கு பின் தமிழகத்தில் மீண்டும் ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று

நீண்ட நாட்களுக்கு பின் தமிழகத்தில் மீண்டும் ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று

கொரோனா சோதனை

கொரோனா சிகிச்சை முடிந்து கடந்த 24 மணி நேரத்தில் 610 குணமடைந்துள்ளனர். இதனால் கொரேனாாவிலிருந்து 8,45,178 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

  • Share this:
    தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1087 பேருக்கு புதிததாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் குறைந்திருந்த கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்திருந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று மீண்டும் ஆயிரத்தை கடந்துள்ளது.

    இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிததாக 1087 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,64,450 ஆக அதிகரித்துள்ளது.

    மேலும் கொரோனா சிகிச்சை பலனின்றி 9 பேர் உயிரிழந்துள்ளனர். தனியார் மருத்துவமனையில் 6 பேரும், அரசு மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 12,582 ஆக உள்ளது.

    கொரோனா சிகிச்சை முடிந்து கடந்த 24 மணி நேரத்தில் 610 குணமடைந்துள்ளனர். இதனால் கொரேனாாவிலிருந்து 8,45,178 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்து செங்கல்பட்டில் 105 பேருக்கும் கோவையில் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Published by:Vijay R
    First published: