தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா உயிரிழப்பு 20-க்கும் கீழ் குறைவு

கொரேனாாவிலிருந்து இன்று ஒரே நாளில் 2,308 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 7,15,892 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா உயிரிழப்பு 20-க்கும் கீழ் குறைவு
  • News18 Tamil
  • Last Updated: November 15, 2020, 10:08 AM IST
  • Share this:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2308 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவது மக்களை நிம்மதியடைய வைத்துள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 2500-க்கும் கீழ் பதிவாகி வருகிறது. அதன் படிகடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 2257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,46,079 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரேனாாவிலிருந்து இன்று ஒரே நாளில் 2,308 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 7,15,892 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இன்று 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 11,362 ஆக அதிகரித்துள்ளது.


மேலும் சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று 1000-க்கும் கீழ் பதிவாகி உள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 585 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
First published: November 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading