தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 867 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அதிகமாக 352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த மாதங்களில் 400-க்கும் கீழ் பதிவான கொரோனா தொற்று தற்போது மீண்டும் ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதனால் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக தலைமை செயலாளர் அறிவித்துள்ளார்.
இதனிடையே இன்று தமிழகத்தில் 867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஒத்து மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,61,429 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 12,556 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 561 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 8,43,423 பேர் கொரோனாவில் இருந்து விடுப்பட்டுள்ளனர்.
சென்னையை அடுத்து செங்கல்பட்டில் 86 பேருக்கும் கோவையில் 81 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.