தமிழகத்தில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 23

தமிழகத்தில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 23

கோப்புப்படம்

கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 1977 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5989 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிலிருந்து 1952 பேர் குணமடைந்துள்ள நிலையில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இது தொடர்பாக சுகாரதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 5989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த கொரோனா பாதிப்பு 9,26,816 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 1977 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தப்படியாக கோவையில் 501 பேருக்கும் செங்கல்பட்டில் 615 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா பாதித்த 37,673 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்ற குணமடைந்து 1,952 பேர் வீடு திரும்பி உள்ள நிலையில் 8,76,257  பேர் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

    மேலும் சிகிச்சை பலனின்றி 23  பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரேனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,886 ஆக உள்ளது.
    Published by:Vijay R
    First published: