தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3077 பேருக்கு கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 45

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3077 பேருக்கு கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 45
கோப்பு படம்
  • Share this:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3077 பேருக்கு கொரேனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4314 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று 4000-க்கும் பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 3077 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,00,193 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரேனாாவிலிருந்து இன்று ஒரே நாளில் 4,314 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 6,55,170 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இன்று 45 உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 10,825 ஆக அதிகரித்துள்ளது.



மேலும் சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று 1000-க்கும் கீழ் பதிவாகி உள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 833 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

First published: October 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading