• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா தொற்று... இன்றைய பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா தொற்று... இன்றைய பாதிப்பு நிலவரம்

கொரேனாாவிலிருந்து இன்று ஒரே நாளில் 2,504 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 7,04,031 பேர் குணமடைந்துள்ளனர்.

  • Share this:
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 2505 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவது மக்களை நிம்மதியடைய வைத்துள்ளது. கடந்த ஒரிரு நாளாக கொரோனா பாதிப்பு 2500-க்கு கீழ் பதிவாகி வருகிறது. அதன் படிகடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 2487 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,34,429 ஆக அதிகரித்துள்ளது.

    மேலும் கொரேனாாவிலிருந்து இன்று ஒரே நாளில் 2,504 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 7,04,031 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இன்று 30 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 11,244 ஆக அதிகரித்துள்ளது.



    மேலும் சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று 1000-க்கும் கீழ் பதிவாகி உள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 657 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: