தமிழகத்தில் 1725 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று... உயிரிழப்பு 17

தமிழகத்தில் 1725 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று... உயிரிழப்பு 17

கோப்பு படம்

சென்னையில் கொரோனா பாதிப்பு, படிப்படியாகக் குறைந்து, நீண்ட நாட்களுக்குப் பிறகு 500-க்கும் குறைவாக பதிவாகியுள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1725 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2384 பேர் குணமடைந்துள்ள நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

  தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் புதிதாக ஆயிரத்து 725 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 59 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

  சென்னையில் கொரோனா பாதிப்பு, படிப்படியாகக் குறைந்து, நீண்ட நாட்களுக்குப் பிறகு 500-க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. இதன்படி, புதிதாக 497 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 9 ஆயிரத்து 167-ஆக அதிகரித்துள்ளது.

  சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டங்களில் ஆயிரத்து 228 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 495-ஆக அதிகரித்துள்ளது.

  ஒரே நாளில் 2 ஆயிரத்து 384 பேர் குணமடைந்தனர். இதனால், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 32 ஆயிரத்தை தாண்டியது. இதனால் குணமடைந்தோர் விகிதம், 96 புள்ளி 41 சதவீதமாக உயர்ந்துள்ளது. 15 ஆயிரத்து 765 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

  ஒரே நாளில் 63 ஆயிரத்து 777 பேருக்கும், மொத்தமாக இதுவரை 1 கோடியே 8 லட்சத்து 54 ஆயிரம் பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
  Published by:Vijay R
  First published: