தமிழகத்தில் புதிதாக 1430 பேருக்கு கொரோனா தொற்று... உயிரிழப்பு 13
மாநிலம் முழுவதும் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,694-ஆக அதிகரித்துள்ளது.

கோப்பு படம்
- News18 Tamil
- Last Updated: November 28, 2020, 8:02 PM IST
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1430 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து 1453 பேர் குணமடைந்துள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் புதிதாக 1453 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7,79,046 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு, படிப்படியாகக் குறைந்து, நீண்ட நாட்களுக்குப் பிறகு 500-க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. இதன்படி, புதிதாக 393 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,694-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 1,430 பேர் குணமடைந்தனர். இதனால், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 7,56,279 ஆக உள்ளது.
அண்மை செய்திகளுக்கு உடனுக்கு உடன் இணைதிருந்துகள்.
தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் புதிதாக 1453 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7,79,046 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு, படிப்படியாகக் குறைந்து, நீண்ட நாட்களுக்குப் பிறகு 500-க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. இதன்படி, புதிதாக 393 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,694-ஆக அதிகரித்துள்ளது.
அண்மை செய்திகளுக்கு உடனுக்கு உடன் இணைதிருந்துகள்.