கொரோனா பாதிப்பு கடந்தாண்டு ஜூன் மாத நிலையை தற்போதே எட்டும் தமிழகம்?

கொரோனா பாதிப்பு கடந்தாண்டு ஜூன் மாத நிலையை தற்போதே எட்டும் தமிழகம்?

கோப்புப் படம்

கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா பரவலை விட இந்த ஆண்டு நோய் பரவலில் வேகம் அதிகமாக உள்ளது. கிட்டத்தட்ட ஜூன் மாதத்தில் இருந்த அளவை தற்போதைய தமிழகம் எட்டியுள்ளதாக தெரிகிறது.

  • Share this:
கடந்த ஆண்டு மார்ச் 7ஆம் தேதி தமிழகத்தில் முதல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மார்ச் மாதம் முழுவதும் தமிழகத்தில் 124 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது மெல்ல உயர்ந்து ஏப்ரல் மாதத்தில் 2199 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மே மாததில் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து 20,000-த்தை தொட்டது. அதன்பின் பாதிப்பு அதிகரித்து இருந்த போது டிசம்பர், ஜனவரி மாதத்தில் சற்று கணிசமாக குறைந்து வந்தது.

ஆனால் இந்த ஆண்டு பரவலின் வேகம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மார்ச் 5ம் தேதிக்கு முன்பு வரை ஒரு நாளுக்கு 500-க்கும் குறைவானவர்களுக்கே தொற்று கண்டறியப்பட்டு வந்தது. மார்ச்5 ம் தேதி முதல் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. மார்ச் 5 ஆம் தேதி ஒரே நாளில் 543 பேருக்கு தமிழ்நாட்டில் தொற்று உறுதியானது. அதிலிருந்து இரண்டு வாரங்களில் அதாவது மார்ச் 18ஆம் தேதி மேலும் 10,071 பேருக்கு புதிதாக தோற்று கண்டறியப்பட்டது.

அடுத்த ஒரு வாரத்தில் அதாவது மார்ச் 25ஆம் தேதி மேலும் புதிதாக 9856 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த பாதிப்பு இரடிப்பாகி அடுத்த ஒரு வாரத்தில் மார்ச் 31ம் தேதி 13,454 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. மார்ச் மாதத்தில் மட்டும் மொத்தம் 33,381 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பாதிப்பு அதிகரிக்க தொடங்க இன்றுடன் 30 நாட்கள் ஆகின்றன. இது வரை 42,834 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்த நிலைமையாகும்.

தற்போது சிகிச்சையில் உள்ள நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  மார்ச் 5ம் தேதி 3954 பேர் சிகிச்சையில் இருந்தனர். ஒரு மாதத்தில் இந்த எண்ணிக்கை ஐந்து மடங்காக உயர்ந்துள்ளது. தற்போது சிகிச்சை 20,204 கொரோனா நோயாளிகள் தமிழகத்தில் உள்ளனர்.

2020 பாதிப்பு

மார்ச் - 124
ஏப்ரல்  - 2323
மே  - 22333
ஜூன்  - 90167

2021 பாதிப்பு

மார்ச் - 33,381
ஏப்ரல் 3ம் தேதி வரை 42,834

2021 ஆக்டிவ் கேசஸ்

மார்ச் 5. 3954
ஏப்ரல் 3. 20204

இதன் காரணமாக சில புதிய வழிமுறைகளை கடைப்பிடிக்க மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு பொதுசுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

பரிசோதனைகளை பன்மடங்கு அதிகரிக்க வேண்டும். அதாவாது தொற்று உறுதியாகும் விகிதம் 1% ஆக இருக்கும் வகையில் பரிசோதனைகள் அதிகரிக்க வேண்டும். 24 மணி நேரத்துக்குள் பரிசோதனை முடிவுகள் கிடைக்க வேண்டும்.

தொட்டு உறுதியாகும் ஒவ்வொரு நபருக்கும் அவருடன் தொடர்பில் வந்த 25 முதல் 30 நபர்களை கண்டறிந்து பரிசோதனை செய்ய வேண்டும். தொற்று உறுதியானது கண்டறிந்ததில் இருந்து 72 மணி நேரத்திற்குள் இந்த காண்டாக்ட் ட்ரேசிங் செய்து முடிக்கப்பட வேண்டும்.

ஒரு பகுதியில் மூன்று நபர்களுக்கு தோற்று உறுதி செய்யப்பட்டால் அது கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு அதற்கான நடைமுறைகள் கடைபிடிக்க வேண்டும்.

முகக் கவசம் அணியாவிட்டால் சேவைகள் வழங்கப்படாது என்ற அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு தேவைப்பட்டால் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடிய பகுதிகளில் தடுப்பூசி முகாம்களை தீவிரப்படுத்த வேண்டும். மற்ற இடங்களில் இருந்து தடுப்பூசிகளை பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடிய இடங்களுக்கு மாற்றி அனுப்பலாம்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை இயக்குனர் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Vijay R
First published: