சர்க்கரை நோயாளிகள் 99% குணமடைய, மருந்து, உணவுகளை உரியமுறையில் உட்கொண்டாலே போதும்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

:கொரோனா அதிகம் பாதித்த மண்டலங்களில் தற்போது நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

சர்க்கரை நோயாளிகள் 99% குணமடைய,  மருந்து, உணவுகளை உரியமுறையில் உட்கொண்டாலே போதும்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் (கோப்புப்படம்)
  • Share this:
சென்னை புளியந்தோப்பு பகுதியில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, இன்றைய தினம் பல்வேறு பகுதிகளில் பரிசோதனை மையங்கள் நடத்தி வருவதாகவும், கொரோனா ஆரம்பித்ததில் இருந்தே மையங்கள் நடத்தப்படுவதாகவும் தற்போது அதன் என்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் குறிப்பாக சென்னையில் பிரிக்கப்பட்டுள்ள 15 மண்டலங்களில் 8,426 மையங்கள் நடத்தப்பட்டு உள்ளது. அதில் 20,043 பேருக்கு தொற்று அறிகுறி கண்டறியப்பட்டு 16,000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளதாக கூறினார். அத்துடன் பல மண்டலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை குறைந்து, அனைவரும் குணமடைந்து வருவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழக அரசு, 97 சிறப்பு ரயில் மூலம் 1,37,755 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை அனுப்பி வைக்கும் முன் அவர்களுக்கு தேவையான பரிசோதனை முழுவதும் சரிபார்க்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.


அதேபோல் சர்க்கரை நோய் உள்ளவர்கள், நோய் தொற்று அறிகுறி இருக்கும் போது, ஒழுங்கான முறையில் மருந்துகள், உணவு உட்கொண்டாலே 99% குணமடைந்து விடுவர் என தெரிவித்தார்.

தற்போது நாம் மாஸ்க் அணிவது இந்த காலக்கட்டத்தில் திடீரென உருவான ஒரு பழக்கம். இதனால் ஆரம்ப காலத்தில் மாஸ்க் விற்பனையும் அதிகரித்தது. அதன் காரணமாக அரசு இவ்விவகாரத்தில் தலையிட்டு விலை நிர்ணயம் குறித்து முடிவெடுத்தது. அதன் காரணமாக தற்போது மாஸ்க் விலை என்பது குறைந்து, ஒரே மாதிரியான விலை விற்கப்பட்டுகிறது என்று கூறினார்.

அதுமட்டுமின்றி மாநகராட்சி சார்பில் மருத்துவ சேவைக்கு பயன்படுத்தும் 3 அடுக்கு மாஸ்க்கள் மாநகராட்சியில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மட்டும் நாள் ஒன்றுக்கு 45,000க்கும் அதிகமான மாஸ்க்குகள் தேவைப்படுகிறது. இதுவரை 50 லட்சம் மாஸ்க்குகளை மாநகராட்சி கொள்முதல் செய்துள்ளது என்று கூறினார்.முதலமைச்சர் அறிவிப்பின் படி, குடிசை பகுதி மக்களுக்கு மறுசுழற்சி முறையில் பயன்படுத்தும் 2 அடுக்குகளில் காட்டன் மாஸ்க்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. அது ஒன்றின் விலை 15 ரூபாய். மேலும் N95  மாஸ்க் கொடுத்து பாதுகாப்பான முறையில் பணியை தொடர்ந்து செய்வது தமிழகம்தான் என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க...

ஜியோ ஃபைபர் இருக்கா? அப்போ இந்த புதிய சலுகை உங்களுக்குத்தான்...

இறுதியாக, ராஜ் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் இறந்தது அதிர்ச்சி அளிக்கிறது என்றும், மாநகராட்சி சார்பில் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் கூறினார்.

அதுமட்டுமின்றி அனைத்து பத்திரிக்கை நண்பர்களும் மிகவும் கவனமாக இருந்து, பாதுகாப்பான முறையில் தங்கள் பணிகளை செய்ய வேண்டும் என்றும், சர்க்கரை நோய் உள்ளவர்கள், நோய் தொற்று அறிகுறி ஏற்பட்ட உடன் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சரியான உணவு முறையை கடைபிடித்தாலே நோய் தொற்று நம்மை விட்டு நீங்கி விடும் எனக் கூறினார்.
First published: June 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading