4 நாட்களில் ஒரு லட்சம் பேர் பாதிப்பு...! தீவிரமடையும் கொரோனாவால் உலக சுகாதார நிறுவனம் கவலை

கொரோனா உறுதிப்படுத்தப் பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர வெறும் நான்கு நாட்களே எடுத்துக் கொண்டது என்று டெட்ரோஸ் கூறியனார்.

4 நாட்களில் ஒரு லட்சம் பேர் பாதிப்பு...! தீவிரமடையும் கொரோனாவால் உலக சுகாதார நிறுவனம் கவலை
டெட்ரோஸ் - உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்
  • Share this:
பெருந்தொற்று நோயாக உருவெடுத்துள்ள கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதனோம் கிப்ரயெசூஸ், முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நாளில் இருந்து 67 நாட்களில் ஒரு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும், ஆனால் அடுத்த ஒரு லட்சம் பேர் 11 நாட்களில் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் கொரோனா உறுதிப்படுத்தப் பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர வெறும் நான்கு நாட்களே எடுத்துக் கொண்டது என்று கூறிய டெட்ரோஸ், மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு ஜி 20 நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
First published: March 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading