சீனாவை விட ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகரிப்பு - அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்

CoronaVirus | Covid 19 | "இத்தாலியில் ஒரே நாளில் 250 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,266ஆக உயர்ந்துள்ளது"

சீனாவை விட ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகரிப்பு - அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: March 14, 2020, 6:29 AM IST
  • Share this:
கொரோனா வைரஸ் பரவும் மையமாக சீனாவில் இருந்து ஐரோப்பா மாறியுள்ளது. அமெரிக்காவில் மருத்துவ அவசர நிலையை அதிபர் ட்ரம்ப் பிரகடனம் செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் மையமாக சீனாவை பின்னுக்குத் தள்ளி ஐரோப்பிய நாடுகள் உருவாகியுள்ளன. அதாவது கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சீனாவை விட ஐரோப்பிய நாடுகளில அதிகமாகியுள்ளது.

பிரேசில் அதிபர் Jair Bolsonaroக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது பரிசோதனையில் உறுதியாகி உள்ளது. அவரது செய்தித் தொடர்பாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.


ஈரானில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 514ஆக உயர்ந்துள்ள நிலையில், தெரு, சாலைகளை 24 மணி நேரத்திற்குள் சுத்தம் செய்யும் பணியில் ராணுவம் இறங்கியுள்ளது.

ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த சுகாதாரத்துறை உதவி அமைச்சர் இரான் ஹரிர்சி தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். பயணங்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்ட அவர், மக்கள் ஒத்துழைக்காவிட்டால் ஜூன் வரை கொரோனாவை ஒழிக்க முடியாது என்றார்.

அமெரிக்காவில் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் அதிபர் ட்ரம்ப் அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளார். அடுத்த ஒரு வாரத்திற்குள் 10 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள் என அச்சப்படுவதால் ஸ்பெயினிலும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.இத்தாலியில் ஒரே நாளில் 250 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,266ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

பிரான்சில் 2,800 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் 100 பேருக்கு மேல் கூடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதுடன் தொழிலாளர்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTubeFirst published: March 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading